தமிழகத்தில் முதன்முறையாக கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனை
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் சோதனை முறையில் செலுத்தியுள்ளனர்.
கொரோனாவைக் குணப்படுத்துவதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்னும் மருந்தைத் தயாரித்துள்ளது.
இந்த மருந்தை 13 மருத்துவமனைகளில் மனிதர்களுக்குச் செலுத்திச் சோதித்துப் பார்க்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. தமிழகத்தில் சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் சோதனைக்குத் தன்னார்வலர்கள் 10 பேர் முன்வந்தனர்.
அவர்களுக்கு 2 நாட்களாக முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை இருவருக்கு முதல் முறையாக கோவாக்சின் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. சோதனை வெற்றியா என்பது ஆய்வு முடிவில்தான் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments