கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்
கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொலி உரையில், நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசாங்கம் கூறியது என்றும், ஆனால் இந்த எண்ணிக்கை ஒரே நாளில் எப்படி 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மார்ச் 1 முதல் ஜூன் 10 வரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது, அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளதாக அரசு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அப்படியானால் தினமும் அரசு பொய் சொல்லி வந்திருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன என்றும், இன்னும் இதுபோல் எத்தனை மரணங்கள் மறைக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் இருப்பதாக திமுக தலைவர் கூறியுள்ளார்.
கொரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் #MKStalin | #TNGovt | #Covid19 | #TNCorona https://t.co/lhIZJGlOkh
— Polimer News (@polimernews) July 23, 2020
Comments