கறுப்பர் கூட்டம் சேனலை கண்டித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிடாதது ஏன்?பா.ஜ.க. தலைவர் முருகன் கேள்வி

0 3881

கந்த சஷ்டி கவசம் பாடலை இழிவாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அறிக்கை வெளியிடாதது ஏன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பேசிய அவர், கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக கந்த சஷ்டி கவசம் பாடலின் பெருமையை உணர்த்தும் வகையில் பாடல் ஒன்றை பா.ஜ.க. தமிழக தலைவர் முருகன் வெளியிட்டார். மேலும் திரையுலகம் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த சிலர் பாஜகவில் இணைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments