வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2005

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய கூடும்.

கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளையும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, திருப்பூர் மாவட்டம் குந்தலம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY