அமெரிக்காவில் 30,000 ஆண்டுகள் பழமையான கல் கலைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

0 3524
அமெரிக்காவில் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம்

அமெரிக்காவில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக கல் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு கிழக்கு ஆசியாவில் இருந்து முதன்முதலில் மனிதன் சென்றதாக கூறப்படும் நிலையில், எப்போது சென்றார்கள் என்பது இன்றளவும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்காவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அஸ்டில்லெரோ மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 2,740 மீட்டர் உயரத்தில் உள்ள சிக்விஹுயிட் குகையில், 2012 ஆம் ஆண்டு முதல் மெக்ஸிகோ பல்கலைக்கழகக் குழு ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஏறக்குறைய 2 ஆயிரம் கல் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அவற்றில் சில 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பது கார்பன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் பண்டைய டி.என்.ஏவைத் தேடும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments