14 தொலைக்காட்சி சேனல்களில் ஆக.,1 முதல் வகுப்பு வாரியாகப் பாடங்கள் ஒளிபரப்பப்படும்

0 4692

14 தொலைக்காட்சி சேனல்களின் மூலம் ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் வகுப்பு வாரியாகப் பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே கரட்டுப்பாளையம் ஊராட்சியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொலைக்காட்சிகள் மூலம் பாடங்களை ஒளிபரப்புவதில் உள்ள குறைபாடுகள் விரைவில் சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments