ஓராண்டை நிறைவு செய்த சந்திரயான்-2 செயற்கைகோள் திட்டம்

0 3901

நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஓராண்டை நிறைவு செய்துள்ளது.

இதுவரை யாரும் கண்டிராத நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் அனுப்பப்பட்ட லேண்டர் கருவியை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது. இருப்பினும், சந்திரயானுடன் அனுப்பப்பட்ட 8 கருவிகளும், ஆர்பிட்டரும் கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சந்திரயான்-2 மூலம் பெறப்பட்ட அரிய அறிவியல் தரவுகள் உலகளாவிய பயன்பாட்டுக்கு, வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், சந்திரயான் 2 திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments