சென்னை ஆளுநர் மாளிகையில் 92 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

0 2040

சென்னை ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களுக்கு பெருந்தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து அனைவருக்கும சோதனை செய்யப்பட்டதில் 92 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இரூப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநாகராட்சி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆளுநர் மாளிகை பாதுகாப்பு பணியில் வேறொரு கம்பெனி வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments