பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம்

0 1786

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், தமது அரசைக் கவிழ்க்க சதி நடப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தை முன்மாதிரியாகக் கொண்டு சச்சின் பைலட் மூலம் தமது அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி எடுத்து வருவதாகவும் கெலாட் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒவ்வொன்றாக கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை கர்நாடகம் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் அரங்கேற்றுவது அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயலாகும் என்றும் அசோக் கெலாட் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments