கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு..!

0 12251
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணாக்கர்கள் தவிர்த்து, மற்ற மாணாக்கர்களுக்கு, இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணாக்கர்கள் தவிர்த்து, மற்ற மாணாக்கர்களுக்கு, இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்குமாறு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவும் சூழலில் மாணாக்கர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி, மதிப்பெண்கள் வழங்கி, இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும், இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும், இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று, எம்.சி.ஏ. முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்தப் பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டிற்குச் செல்ல அனுமதிக்க உத்தரவிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான ஒரு அரசாணையை வெளியிட உயர்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதற்கிடையே கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு இந்த பருவத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, இறுதி பருவத் தேர்வுகள் தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கிடக் கோரி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளதாகவும், முதலமைச்சரின் கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

AICTE எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு மற்றும் UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் இன்றி, இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்பதால், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முடிவைப் பொறுத்து, தமிழக அரசு முடிவெடுக்கும் என உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தகவல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments