லடாக் எல்லை அருகே 40,000 துருப்புகளைக் குவித்து வைத்துள்ள சீனா...
லடாக் எல்லையில் படைகளைப் பின்வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையருகே சுமார் 40 ஆயிரம் சீனப்படையினர் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீனா படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளித்தது. லடாக்கின் சில பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கின. ஆனால் சர்ச்சைக்குள்ளான சில நிலப்பரப்புகளில் இருந்து படைகளைத் திரும்பப்பெற சீனா மறுத்துவருகிறது.
பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததையடுத்து சீனா மீண்டும் படைகளைக் குவிக்கத் தொடங்கியுள்ளதாகவும் குறைந்தது 40 ஆயிரம் சீனப் படையினரை அப்பகுதியில் காண முடிவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா பேச்சுவார்த்தையின்போது அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில்லை என்றும் விரைவாக கூடாரங்களை காலி செய்து பின்னகரும் நோக்கம் சீனப்படைகளுக்கு சிறிதும் கிடையாது என்றும் எல்லையின் நிலவரத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments