மணிப்பூர் மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு
கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 14 நாட்களுக்கு இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அம்மாநிலத்தின் தவுபால் மாவட்டத்தில் எவ்விவத பயண வரலாறும் இல்லாத நிலையிலும், சிலருக்கு கொரோனா தொற்று உருவானதை அடுத்து அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலானா அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்று மதியம் 2 மணி முதல் முழு ஊடடங்கு அமலுக்கு வருகிறது. இதுவரை அங்கு 2060 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 642 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Manipur to go under complete lockdown for 14 days, starting 2 pm tomorrow. #COVID19 pic.twitter.com/1L9hYskgqn
— ANI (@ANI) July 22, 2020
Comments