ஊரடங்கால் சாலையின் நடுவே நடைபெற்ற திருமணம்..!

0 3180

பெங்களூருவில் ஊரடங்கு விதிகளில் உள்ள பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளாவைச் சேர்ந்த பெண்ணும், கர்நாடகாவைச் சேர்ந்த மணமகனும் இருமாநில எல்லைப் பகுதியில் வைத்து சாலை நடுவே திருமணம் செய்துகொண்டனர்.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடக எல்லையில் உள்ள சாமராஜ் நகர் மூல்ஹோலில் இந்த திருமண நிகழ்வு அரங்கேறியது. இருவருமே தத்தமது மாநில எல்லைகளை தாண்டிச் சென்றால் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினர். துளசி மாலையை பரிமாறிக் கொண்டு தாலி கட்டிக் கொண்ட ஜோடி, பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments