ஹூஸ்டனில் உள்ள சீனத் துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட அமெரிக்கா உத்தரவு
ஹூஸ்டனில் உள்ள சீனத் துணை தூதரகத்தை 72 மணி நேரத்துக்குள் மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த தூதரகத்தில் தீ புகைந்ததால் மூட உத்தரவிட்டதாக தெரிவித்தார். தூதரகத்தில் ஆவணங்கள் மற்றும் காகிதங்களை எரித்ததாகக் குறிப்பிட்ட அவர், மேலும் பல தூதரகங்களை மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.
இதற்கு பதிலடியாக வூகானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனாவும் பரிசீலித்து வருகிறது. அமெரிக்க விவகாரங்களை உளவு பார்க்க முயற்சித்ததாகவும், அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி வருகிறது. தூதரகத்தை மூடும் உத்தரவால், இரு நாட்டுப் பனிப்போர் மேலும் அதிகரித்து, விரிசல் அடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Comments