கைவிலங்குடன் கடலில் குதித்த போக்சோ கைதி..! ஆதாரத்தை காட்டுவதாக கூறி எஸ்கேப்

0 3971

கேரள மாநிலம் காசர்கோட்டில் கைவிலங்குடன் கடலில் குதித்து தப்பிய போக்சோ வழக்கு விசாரணைக் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்...

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் சூர்லு கன்ஹங்காட் பகுதியில் வசித்து வரும் மகேஷ் என்பவன், ஒரு வீட்டின் குளியலறையில் தனது ஸ்மார்ட் போனை மறைத்து வைத்து அங்கு 16 வயது சிறுமி குளிப்பதை படம் பிடித்த வழக்கில் அண்மையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டான்.

மகேசிடம் நடத்திய விசாரணையில், வழக்கின் முக்கிய ஆதாரமான ஆபாச படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட செல்போனை காசர்கோடு துறைமுகம் அருகே பாறை இடுக்கில் மறைத்து வைத்திருப்பதாக கூறினான். இதையடுத்து அவனை கைவிலங்கிட்டு இரு போலீசார் அவன் கூறிய பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

அங்கு வைத்து செல்போனை எடுத்துக் கொடுப்பது போல நடித்த விசாரணை கைதி மகேஷ் திடீரென கைவிலங்குடன் கடலுக்குள் குதித்து தப்பினான், அவனை பிடிக்க 2 போலீசாரும் கடலுக்குள் குதித்த நிலையில் அவனை பிடிக்க இயலவில்லை.

உடனடியாக கடலோர பாதுகாப்புபடையினர், தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர் கைதியை மீட்க முடியவில்லை. கடலையொட்டிய பாறை இடுக்கில் இருந்து அவனது செல்போனை கண்டுபிடித்துள்ளனர். 

அது பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் அவன் தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments