கொரோனா புதிய உச்சம்.. அச்சம் தரும் பாதிப்பு

0 9096
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் பலி

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக ஒரே நாளில் 5 ஆயிரத்து 849 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரே நாளில் 5 ஆயிரத்து 849 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழக கொரோனா வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக வைரஸ் தொற்று உறுதி ஆனது, இதுவே முதன்முறையாகும்.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை கடந்துள்ளது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மதுரையைச் சேர்ந்த 23 வயது இளைஞர், சென்னையில் 33 வயது நபர் உள்பட 74 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதனால் தனிநபர் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 4 ஆயிரத்து 910 பேர் மீண்டுள்ளதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments