உள்நாட்டில் அணுஉலை தயாரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு

0 5889
உள்நாட்டில் அணுஉலை தயாரிக்கப்பட்டதற்கு பாராட்டு

குஜராத் மாநிலம் கக்ராபரில் உள்நாட்டிலேயே அணு உலையை வெற்றிகரமாக தயாரித்துள்ளதற்காக  அணுமின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

700 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3வது அணுமின் உலையை உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மின் உற்பத்தி தொடங்குவதற்கான தயார் நிலையில் அந்த உலை உள்ளது. இதையொட்டி பிரதமர் டிவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்த சாதனையை நிகழ்த்திய அணுமின் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நிகழ இருக்கும் பல சாதனைகளுக்கு இது வழிகாட்டியாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments