அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை மையமாக வைத்து நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்காவின் கடற்கரையோர பகுதியை மையமாக வைத்து, பூமிக்கடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை இந்நிலநடுக்கம் நேரிட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 8ஆக பதிவான நிலநடுக்கத்தால் அப்பகுதியே கடுமையாக குலுங்கியது. இதனால் பல இடங்களில் சாலையில் சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நிலநடுக்கத்தில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
Sirens blasting. Sounds of helicopters in the air. Everyone waiting the 12:05 impact time. #tsunami #Alaska pic.twitter.com/mBZmvssLQz
— Timothy Daugherty ?? ❼ (@TheCoastiemater) July 22, 2020
Comments