சாத்தான்குளம் வழக்கில் 3 போலீசாருக்கு ஆக. 5 வரை நீதிமன்றக் காவல் : விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய 3 போலீசாரை ஆகஸ்ட் 5-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் 2-வது கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில்முத்து ஆகிய மூவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, சிபிஐ அதிகாரிகள் குழுவில் இருந்த 2 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, போலீஸ் கைதிகள் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நாளைக்குப் பதிலாக அவசரகதியாக இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, மூன்று போலீசாரையும் ஆகஸ்ட் 5ந் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 3 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சாத்தான்குளம் வழக்கில் 3 போலீசாருக்கு ஆக. 5 வரை நீதிமன்றக் காவல் : விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு | #Sathankulam | #Covid19 https://t.co/HQ5Ies0Vc4
— Polimer News (@polimernews) July 22, 2020
Comments