கண்பார்வையற்ற முதியவருக்கு பேருந்தில் ஏற உதவிய பெண்ணுக்கு வீடு பரிசளித்த நகைக்கடை அதிபர்
கேரளாவில் கண்பார்வையில்லா முதியவருக்காக ஓடிச் சென்று பேருந்தை நிறுத்தி அவர் ஏறுவதற்கு உதவிய இளம் பெண்ணை நேரில் பாராட்டி பிரபல நகைக்கடை அதிபர் வீடு ஒன்றை பரிசு அளித்துள்ளார்.
திருவல்லாவில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரியும் சுப்ரியா என்பவர் கடைக்கு வெளியே நின்றபோது சாலையில் கண்பார்வையில்லாத முதியவர், தட்டுத்தடுமாறி பேருந்து ஏற சென்றதை கண்டார்.
இதையடுத்து புறப்பட தயாரான பேருந்தை நோக்கி ஓடிச் சென்று நிறுத்திய அவர், பிறகு முதியவரை கையைபிடித்து அழைத்து வந்து அதில் ஏற உதவினார்.
இந்த காட்சி அங்கிருந்த நபர் ஒருவரால் செல்போனில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட, அது சமூக இணையளங்களில் வைரலாக பரவியது.
இதை கண்ட பிரபல நகைக்கடை அதிபர் ஜாய் ஆலுக்காஸ், சுப்ரியா தனது கணவருடன் வாடகைக்கு தங்கியுள்ள இடத்துக்கு நேரில் சென்று பாராட்டினார். மேலும் தனது தலைமை அலுவலகம் வரவழைத்து வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
she made this world a better place to live.kindness is beautiful!?
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) July 8, 2020
உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது#kindness #love pic.twitter.com/B2Nea2wKQ4
Comments