அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திறந்த வெளியில், முடி திருத்தம் செய்ய ஆளுநர் உத்தரவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முடி திருத்தும் நிலையங்களை திறந்த வெளியில் செயல்படுமாறு, ஆளுநர் Gavin Newsom, உத்தரவிட்டுள்ளார்.
இரண்டரை மாத கொரோனா ஊரடங்குக்குப் பின், முடி திருத்தும் நிலையங்கள் மீண்டும் செயல்பட துவங்கிய நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவியதால், ஆளுநர் Newsom, முடி திருத்தும் நிலையங்களை, திறந்த வெளியில் மட்டும் செயல்பட அனுமதிக்கப் போவதாக அறிவித்தார்.
இதையடுத்து, ஒரு சில முடி திருத்தும் கலைஞர்கள் திறந்த வெளியில் சிகை அலங்காரம் செய்ய துவங்கினர். பொதுமக்கள் பெரும்பாலானோர் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
CA released new guidelines today allowing for hair salons and barbershops to operate outdoors. #COVID19 https://t.co/3ZSEzBAhuW
— Gavin Newsom (@GavinNewsom) July 20, 2020
Comments