ஹுஸ்டன் சீன துணைதூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு
ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூடுமாறு அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது ஆத்திரத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், இரு தரப்பு ராஜீய உறவுகளை அது மேலும் பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டம் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஹுஸ்டன் சீன துணைதூதரக வளாகத்தில் சீன அதிகாரிகள் ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
Comments