நடிகர் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றாரா? இல்லையா?... ஆய்வு செய்து விளக்கம் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் சென்றுவந்ததற்கு இ பாஸ் பெற்றாரா? இல்லையா? என்பது குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிப்பதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அருகாமை மாவட்டங்களுக்கு செல்ல ஈ பாஸ் கட்டாயம். இதற்கிடையே நடிகர் ரஜினி சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கேளம்பாக்கத்திற்கு காரில் சென்று வந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்துக்குச் சென்று வந்ததற்கு இ பாஸ் பெற்றாரா? இல்லையா? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தேவைப்பட்டால் இது குறித்து ஆய்வு செய்து விளக்கம் அளிப்பதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
முன்னதாக தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொட் ஆணையர் பிரகாஷ், சென்னையில் தற்போது வரை சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்னும் 15 நாட்களில் சென்னையில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்படும் என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் இ பாஸ் பெற்றாரா? இல்லையா?... ஆய்வு செய்து விளக்கம் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் #ActorRajinikanth | #EPass | #ChennaiCorporationCommissionerPrakash https://t.co/MoPmj7O2Aa
— Polimer News (@polimernews) July 22, 2020
Comments