வடிவேலு பட பாணியில் அரிசி கடையில் நூதன கொள்ளை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வடிவேலு பட காமெடி போல, அரிசி கடையில் அரிசி வாங்குவது போல நூதன கொள்ளை சென்னையில் நடந்துள்ளது.
கருப்பசாமி குத்தைக்காரர் படத்தில் அரிசி வாங்குவது போல் , கடைக்காரை ஏமாற்றி தனது கூட்டாளிகளுடன் எடைக்கற்களை வடிவேலு நைசாக திருடிச் செல்வார்.
அதே பாணியில் தரமணியில் சந்திரன் என்பவரின் அரிசி கடையில் அரிசி வாங்குவது போல் நேற்று மாலை வந்த 2 பேர் 30 நிமிடத்திற்கு மேல் கடைக்காரரை திசை திருப்பி உள்ளனர்.
பின்னர் தாங்கள் வாங்கிய 3 மூட்டை அரிசிக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம்மில் எடுத்து வருவதாகவும், மூட்டையை ஏற்ற ஆட்டோ அழைத்து வருவதாகவும் கூறி சென்றுள்ளனர்.
இரவு 7 மணியாகியும் 2 பேரும் வராததால் ஏமாற்றத்துடன் கடையை பூட்டியபோது கல்லா பெட்டியை பார்த்துள்ளார். அப்போது, கல்லாவில் இருந்த 75 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments