நெல் கொள்முதல் : தமிழகத்தில் 4.20 லட்சம் விவசாயிகள் பலன் - அமைச்சர் காமராஜ்
நெல் கொள்முதல் மூலம் தமிழகத்தில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பலன்பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் .
சென்னை - கீழ்ப்பாக்கம் தாமரைப்பூங்கா காவலர் குடியிருப்பு பகுதியில் மாநக ராட்சியுடன் இணைந்து சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்த காய்ச்சல் முகாமை துவக்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிட்டு, தற்போது வரை, இருபத்தேழரை லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தரமான அரிசி விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். "கறுப்பர் கூட்டம்" விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பலரும் பாராட்டி வருவதாகவும், குறிப்பாக, அரசின் நடவடிக்கை களை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
Comments