தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெளிநாடுகள் போன்று திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கும் முறையால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது என்றும், திரைப்படத்துறையினருக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாகவும் கூறினார்.
கொரோனா பரவல் நிலைமையை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் எனக் கூறிய கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாரில் விரைவில் ராணுவ விமானப்படை தளம் அமைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை - கடம்பூர் ராஜூ | #Theater | #MinisterKadamburRaju https://t.co/1ip8d4SHUs
— Polimer News (@polimernews) July 22, 2020
Comments