கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் காலம் பற்றிய அறிவிப்பு : தனிமையில் எத்தனை நாள்?

0 4472
கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அறிகுறிகளும், காயச்சலும் துவங்கிய 24 மணி நேரத்திற்குப் பிறகு 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விதிகளை புதுப்பித்து அறிவித்துள்ளது.

சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி, அதே நேரம் அறிகுறிகள் எதுவும் காணப்படாதவர்கள், சோதனை செய்யப்பட்ட தினத்தில் இருந்து 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் பெரும்பாலானோருக்கு 4 முதல் 9 நாட்கள் வரை மட்டுமே  தொற்று நீடிப்பதாக வெளியான பல ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களிடம் நீண்ட கால வைரஸ் உற்பத்தி நடக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments