நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி டிஎஸ்பிக்கு உத்தரவு

0 1261
சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் திருநெல்வேலி சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பேய்க்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மே 23ஆம் தேதி தனது மகன் மகேந்திரனைச் சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்து 2 நாட்கள் காவலில் வைத்துக் கடுமையாகத் தாக்கியதால் ஜூன் 13ஆம் தேதி உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தொடர்பான கடிதத்தை அரசு வழக்கறிஞர் வழங்கினார்.

இதையடுத்து மனுதாரர் வடிவின் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையைத் திருநெல்வேலி சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் ஆகஸ்ட் ஏழாம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments