சென்னை - சேலம் விமான சேவை வாரம் இருமுறையாக குறைப்பு

0 1622
சென்னை - சேலம் இடையே நாள்தோறும் இயக்கப்பட்ட விமான சேவை வாரம் இருமுறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையே நாள்தோறும் இயக்கப்பட்ட விமான சேவை வாரம் இருமுறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு நாள்தோறும் ஒருமுறை ட்ரூஜெட் விமானம் வந்து சென்றது. கொரோனா அச்சம் காரணமாக விமானத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே வந்து சென்றதால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது. திங்கள், சனி என வாரம் இருநாட்களில் மட்டுமே சென்னையிலிருந்து சேலத்திற்கு விமானம் வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் நேரமும் வரும் 31ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பகல் 11.45 மணிக்கு விமானம் புறப்பட்டு சேலத்திற்கு 12 .45 மணிக்கு வரும்.

சேலத்தில் இருந்து 1.05 மணிக்குப் புறப்பட்டுச் சென்னைக்கு 2.05 மணிக்கு வந்து சேரும். ஜூலை மாதத்துக்குப் பின்னர் பழைய கால அட்டவணைப்படி விமானம் வந்து செல்லும் என ட்ரூஜெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments