புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLA-கள் வெளிநடப்பு

0 1641
துணைநிலை ஆளுநரை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்ற அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், மின் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடும் போடுவதாக கூறி அதிமுக, பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு பேரவைக்குள் வந்தனர்.

பின்னர், ஆளும் காங்கிரஸ் அரசும், துணைநிலை ஆளுநரும் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்து வருவதால், சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆறு மாதம் வரை காங்கிரஸ் அரசை மத்திய அரசு முடக்கவும், புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறி துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments