டாங்குகளில் பொருத்தும் கருவிக்கான ஒப்பந்தம்

0 1362
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம்

பாரத் எத் மூவர்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 557 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ டேங்குகளுக்கான நிலத்தை சமன் செய்யம் கலப்பை போன்ற கருவிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ராணுவத்தின் T-90 டாங்குகளில் இந்த கருவி பொருத்தப்படுவதால், அவை நிலத்தடி குண்டுகளால் பாதிக்கப்படாமல், விரைவாக எதிரியின் களத்தில் ஊடுருவ முடியும். இந்த 1512 கருவிகளும் வரும் 2027 க்குள் டாங்குகளில் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய தயாரிப்பான T-90 டாங்குகள், சீனா உடனான பதற்றம் நிலவிய சூழலில், லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட பொதுத் துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் ஜேசிபி உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனமாகும். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான இந்த கொள்முதல் அந்த நிறுவனத்திடம் இருந்து நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments