இராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் தங்கபாண்டியன். கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு இவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இவருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. இதைத் தொடந்து அவர் சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதியானதால் அவருடன் தொடர்பிலிருந்த தி.மு.கவினர் தொற்று பரிசோதனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் மனைவி மற்றும் இருமகன்களும் ஏற்கனவே தொற்று பாதித்து மீண்டுள்ளனர்.
இராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா பாதிப்பு | #Thangapandian | #DMKMLA https://t.co/XXlEkeCIKN
— Polimer News (@polimernews) July 22, 2020
Comments