அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு.. மருத்துவ படிப்பில் வரப்பிரசாதம்

0 3524
மருத்துவ படிப்பில் 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டுப் படித்தால் வரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெறுவதோடு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எளிதாகச் சேரலாம் எனக் கல்வியாளர்கள் வழிகாட்டியுள்ளனர்.

மருத்துவ படிப்பில் 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டுப் படித்தால் வரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் வெற்றி பெறுவதோடு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் எளிதாகச் சேரலாம் எனக் கல்வியாளர்கள் வழிகாட்டியுள்ளனர்.

மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3250 எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 விழுக்காடு போக மீதம் 2764 இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் 200 முதல் 225 இடங்கள் வரை கிடைக்கும்.

தமிழகத்தில் மேலும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், வரும் ஆண்டுகளில் அவை செயல்பாட்டிற்கு வரும் போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் மேலும் அதிகரிக்கும்.

இந்தச் சமயத்தில் அரசு பள்ளி மாணவர்கள் திட்டமிட்டுப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறுவதுடன் 7 புள்ளி 5 விழுக்காடு இடஒதுக்கீடும் இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரலாம் எனக் கல்வியாளர்கள் வழிகாட்டுகின்றனர்.

நீட் தேர்வுக்குப் பின்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாக மாறிவிட்டது என்கிற புகார் இருந்தது. இந்தநிலையில் இந்த 7.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என்பது ஊர்ப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து இருப்பதாகவும் இதை மனமார வரவேற்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பதால் இந்த 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவதற்குத் தமிழக அரசு முயல வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments