சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 3 பேரிடம் சிபிஐ 3-வது நாளாக விசாரணை

0 1387
சாத்தான்குளம் தந்தை- மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை- மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் 3-வது நாளாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் வைத்து காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில்முத்து ஆகிய மூன்று போலீசாரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

3 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ள சிபிஐ போலீசார், நேற்று அவர்களை சாத்தான்குளம் அழைத்துச் சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு விசாரணையை முடித்துக்கொண்டு 3 பேரும் மீண்டும் நள்ளிரவில் மதுரைக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த நிலையில், மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

காவலர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் அவர்களின் தொலைபேசி உரையாடல் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments