சீன எல்லையில் கண்காணிப்புப் பணியில் பொசைடன் 8ஐ விமானம்
சீன எல்லையில் கண்காணிப்பு மேற்கொள்ள கிழக்கு லடாக்கில் பொசைடன் 8ஐ நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானத்தை இந்திய கடற்படை நிறுத்தியுள்ளதாகவும், மிக்-29 கே போர் விமானங்களில் சிலவற்றை விமானபடை தளங்களில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தையடுத்து எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து இந்திய விமானப்படை தன்னிடமுள்ள சுகோய் 30எம்கேஒய், ஜாக்குவார், மிராஜ் 2000 போர் விமானங்களில் பெரும்பாலானவற்றையும், அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் எல்லையில் நிறுத்தியுள்ளது.
பிரான்சால் விரைவில் ஒப்படைக்கப்பட இருக்கும் 5 ரபேல் விமானங்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் டோக்காலாம் சம்பவத்துக்கு பிறகு சீன படையையும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் படையையும் கண்காணிக்க பயன்படுத்திய பொசிடன் 8ஐ விமானத்தை கடற்படை நிறுத்தியுள்ளது. மிக் 29 கே விமானங்களில் சிலவற்றை நிறுத்தவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.
Comments