கொரோனா பரவல் அதிகமானாலும் இறப்பு விகிதம் குறைவு - டெல்லி ஆய்வு
கொரோனாவைரசின் பரவல் அதிகமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.
முன்னர் ஏற்பட்ட சார்ஸ் தொற்றின் போது இறப்பு விSars-Cov-2 virus கிதம் 9.7 ஆகவும், மெர்ஸ் தொற்றின் போது இறப்பு விகிதம் 34 ஆகவும் இருந்த நிலையில், கொரோனா இறப்பு விகிதம் டெல்லியில் 0.8 சதவிகிதமாக மட்டுமே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மக்களில் 22.86 சதவிகிதம் பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று வந்து போய் விட்டதால், மக்கள் ஒரு கூட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் பெற வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று இதர பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் போது, மக்களுக்கு டெல்லியில் ஆன்டிபாடீஸ் உருவாகும் விதமும் அதிகமாக உள்ளது.
Comments