இந்திய-பாக் எல்லை நோக்கி வெட்டுக்கிளி கூட்டம் வரும் - ஐ.நா. எச்சரிக்கை
சோமாலியாவில் இருந்து இந்த மாதம் பாலைவன வெட்டுக்கிளிக் கூட்டம் இந்திய-பாகிஸஃதான் எல்லையை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளது என ஐ.நா. எச்சரித்துள்ளது.
சோமாலியாவின் ஹர்கீசியா மற்றும் கரோவே பீடபூமியில் இப்போது காணப்படும் வெட்டுக்கிளி கூட்டத்தை விரட்டும் பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. வின் உணவு-விவசாய அமைப்பு, அவை கிழக்கு நோக்கி பறந்து, இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு வரக்கூடும் என கூறியுள்ளது.
இந்த அபாய அறிவிப்பை அடுத்து, தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் மூத்த அதிகாரி குர்ஜார் தெரிவித்துள்ளார்.
தார்பர்கர், சோளிஸ்தான் ஆகிய பாலைவனங்களில் வெட்டுக்கிளிகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து வருவதால், அவற்றின் எண்ணிக்கையும் பல மடங்காக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments