காசியாபாத்தில் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளர் உயிரிழப்பு

0 1469
காசியாபாத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காசியாபாத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

காசியாபாத் விஜயநகரை சேர்ந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கடந்த திங்களன்று தனது மகள்களுடன் இருசக்கரவாகனத்தில் சென்ற போது, அவரை சுற்றிவளைத்த மர்மநபர்கள் சரமாரியாக தாக்கியதோடு தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவர்கள், தோட்டா துளைத்ததால் அவரது தலை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவனையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக தனது சகோதரியின் மகளுக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, விஜயநகர் காவல் நிலையத்தில் விக்ரம் ஜோஷி புகாரளித்திருந்தார்.

அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அடுத்த சில தினங்களில் தான் ஜோஷி தாக்கப்பட்டார். இதனால் ஜோஷியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிய காவல் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதோடு, அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments