தமிழகத்தில் இன்று ஒருநாள் லாரிகள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு, லாரி ஓடாத நாட்களுக்கு சாலை வரி வசூலிப்பு, பழைய வாகனங்களின் உரிமையை ரத்து செய்வது, காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது போன்ற காரணங்களால், லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லாரி ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பது, ஊரடங்கு காலத்திற்கான நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது எனவும், 12 லட்சம் வாகனங்கள் இயங்காது எனவும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
Comments