மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தில் இணைய பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

0 3721
மத்திய அரசின் பிட் இந்தியா (fit india) இயக்கத்தில் ஜூலை 27-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பிட் இந்தியா (fit india) இயக்கத்தில் ஜூலை 27-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பிட் இந்தியா இயக்கத்தின் இணையதளத்தில் இதுவரை குறைந்தளவிலான பள்ளிகள் மட்டுமே பதிவு செய்துள்ளது ஏற்புடையதல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகிற 25-ம் தேதிக்குள், www.fitindia.gov.in என்ற இணையதள முகவரி மூலம் பிட் இந்தியா இயக்கத்தில் பள்ளிகள் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், அதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிவிவர அறிக்கையை ஜூலை 27-ம் தேதி மாலை 3 மணிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments