ரஷ்ய அரசு நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி முக்கிய பிரமுகர்களுக்கு ஏப்ரல் மாதமே செலுத்தப்பட்டதாக தகவல்
மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அரசு நிறுவனமான கேமாலயா (Gamaleya) வில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அங்குள்ள அரசியல் பிரபலங்களுக்கும், பெரிய கோடீஸ்வரர்களுக்கும் கடந்த ஏப்ரல் மாதமே செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை ராணுவ வீரர்கள் 40 பேரிடம் நடத்தப்பட்டாலும் அதன் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை இந்த நிலையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களிடம் அடுத்த கட்ட சோதனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் புதினுக்கும் இந்த ஊசி செலுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை கிரெம்ளின் மாளிகை வட்டாரங்கள் மறுத்துள்ள நிலையில், ஏப்ரல் மாதமே முக்கிய பிரமுகர்களுக்கு சோதித்துப் பார்க்கப்பட்டதாக கூறப்படுவது தமக்கு தெரியாது என கேமாலயா நிறுவனத்தின் தலைவர் Alexander Ginzbur கூறியுள்ளார்.
Comments