11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை - சென்னை வானிலை மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஓட்டியும் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 21 நாள்களில் அரியலூரில் 210.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது இயல்பை விட 135 மில்லி மீட்டர் அதிகம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
Comments