திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்
நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில், முதற்கட்டமாக அவர் பயன்படுத்திய இரு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவரது வீட்டிலிருந்தும் துப்பாக்கிகள், பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து விசாரிக்கப்பதற்காக அவரை 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு செங்கல்பட்டு மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி காயத்ரி தேவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல்.ஏ இதயவர்மனும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி எம்.எல்.ஏ இதயவர்மனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். செங்கல்பட்டு எஸ்பி விடுப்பில் இருப்பதால், காஞ்சிபுரம் எஸ்பி ஷண்முகப்ரியா தலைமையிலான போலீசார் அவரை அழைத்து சென்றனர்.
Comments