தமிழகத்தில் இறுதிபருவ தேர்வு நடத்த தடைகோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட அத்தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்துவது குறித்த அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 6ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பை அமல்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க கோரியும், அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் அவர், கல்லூரிகள், கொரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதால், அங்கு தேர்வு நடத்துவது, மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
அதன்மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, ஏற்கனவே நிலுவையில் உள்ள இதேபோன்ற இன்னொரு வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை 2 வார காலத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தமிழகத்தில் இறுதிபருவ தேர்வு நடத்த தடைகோரி வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு #TNGovt | #SemesterExam https://t.co/D5ZBHRCoMr
— Polimer News (@polimernews) July 21, 2020
Comments