மெக்சிகோவில், போதை பொருள் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்த ஆயுதத்திற்கு பதில் அறிவை பயன்படுத்தப் போகிறேன் - அதிபர் Manuel Lopez
மெக்சிகோவில், போதை பொருள் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்த ஆயுதத்திற்கு பதில் அறிவை பயன்படுத்தப் போவதாக அதிபர் Manuel Lopez தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் காவல்துறை தலைமை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்திய Jalisco கும்பலை சேர்ந்தவர்கள், தங்கள் வசம் உள்ள அதிநவீன இயந்திர துப்பாக்கிகள், கவச உடைகள் மற்றும் ராணுவ கவச வாகனங்களின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து, கருத்து தெரிவித்த அதிபர் Manuel Lopez, வன்முறைக்கு ஒரு போதும் வன்முறை தீர்வாகாது என்றார்.
மேலும், இளைஞர்களை குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும் வறுமையை ஒழிப்பதே, தனது லட்சியம் என அவர் தெரிவித்துள்ளார். மெக்சிக்கோவில் 4 மாதங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் 11,535 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Comments