சாத்தான்குளம் போலீசார் தாக்கப்பட்டதில் மகேந்திரன் என்பவர் மரணடைந்ததாக கூறப்படும் விவகாரம்: சிபிசிஐடி விசாரணை

0 3804
சாத்தான்குளம் போலீசார் காவலில் தாக்கப்பட்டதில் மகன் உயிரிழந்ததாக தாய் வழக்கு

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் கொலை சம்பவத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைதாகி சிறையில் உள்ளனர். இந்நிலையில் வடிவு என்பவர் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் தனது இளையமகன் மகேந்திரனை மே 23இல் விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியநிலையில் அதற்கடுத்த நாள் விடுவித்ததாகவும், சுயநினைவிழக்கும் நிலையில் இருந்த மகன் மருத்துவமனையில் ஜூன் 13இல் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். மனு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அதுகுறித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments