ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 2 வாரம் தனிமைபடுத்தப்பட வாய்ப்பு

0 5100
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி வீரர்கள் 2 வாரம் தனிமைபடுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி வீரர்கள்  2 வாரம் தனிமைபடுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக விளையாட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணி இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.

இத்தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லும்போது, அடிலெய்டின் ஓவல் ஹோட்டலில் 2 வாரம் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி (Nick Hockley) கூறியுள்ளார்.

அவ்வாறு தனிமையில் இருந்தாலும் வீரர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும் என்பதால், போட்டித் தொடருக்கு இந்திய அணி வீரர்களால் தங்களை நன்றாக தயார்படுத்தி  கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments