பூகம்பத்தை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை - மத்திய பொதுப்பணித்துறை
பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளை தாங்கும் திறன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு இல்லை என மத்திய பொதுப்பணித்துறை, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் 51 அமைச்சகங்களுக்கான 10 புதிய கட்டிடங்களையும் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக தாக்கலான வழக்கில் மத்திய பொதுப்பணித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் 1921 ல் கட்டத் துவங்கிய நாடாளுமன்றக் கட்டிடம் 100 ஆண்டுகளை எட்டியுள்ளதுடன் , அதில் உள்ள மின் மற்றும் பிளெம்பிங் வசதிகள் பலவீனமடைந்துள்ளதாக மத்திய பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
2026 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இப்போதுள்ள கட்டிடம் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments