கர்நாடகாவில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞரின் வாகனம் பறிமுதல்

0 16033

கர்நாடகாவில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தலைநகர் பெங்களூருவில் உள்ள Electronic City மேம்பாலத்தில், இளைஞர் ஒருவர், 1000 சிசி திறன் கொண்ட தன் யமஹா பைக்கை மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியதுடன், அந்த வீடியோவை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை அடுத்து, இளைஞரின் முகவரியை கண்டுபிடித்த போலீசார், அவரது இரு-சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அதி வேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments