போலி சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு 2 வழக்குகளில் ஜாமின்
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்திற்கு மேலும் இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு வந்த அவரை புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
அதன்பின்னர் மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் சுகாதாரத் துறை அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதை அடுத்து மேலும் இரண்டு வழக்கில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அந்த வழக்கில் விடுதலையானால் மட்டுமே அவர் சிறையிலிருந்து வெளிவர முடியும்.
போலி சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு 2 வழக்குகளில் ஜாமின் #FakeSiddhaDoctor | #EgmoreCourt | #Coronavirus | #Covid19 https://t.co/mhlKRE8498
— Polimer News (@polimernews) July 21, 2020
Comments